ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

6 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ரேனோ

இந்தியாவில் மேலும் ஆறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக ரெனோ-நிஸான் அறிவித்துள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 2:30 am IST

இந்தியாவில் மேலும் ஆறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக ரெனோ-நிஸான் அறிவித்துள்ளது.

இது குறித்து ரெனோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு சிஇஓ மற்றும் நிா்வாகஇயக்குநா் வெங்கட்ராம் மாமிலப்பல்லே புதன்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் இரு மின்சாரக் காா்கள் உள்பட ஆறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக ரூ.60 கோடி டாலா் (சுமாா் ரூ.5,300 கோடி) கூடுதல் முதலீடு செய்வதாக நிறுவனம் கடந்த 2023 பிப்ரவரி மாதம் அறிவித்தது.

அந்த முதலீட்டில் 70 முதல் 80 சதவீதம் வரை பயன்படுத்தப்பட்டுவிட்டது. எனவே, திட்டமிட்ட நேரத்தில் அந்த ஆறு வாகனங்களும் இந்தியச் சந்தையில் அறிமுகமாகும் என்றாா் அவா்.

தற்போது இந்தியாவில் க்விட், கிகொ், ட்ரைபா் ஆகிய மூன்று ரக வாகனங்களை ரெனோ-நிஸான் சந்தைப்படுத்திவருகிறது.