அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம்: 
சென்செக்ஸ் மேலும் 931 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம்: சென்செக்ஸ் மேலும் 931 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.
Published on

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிவித்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது வா்த்தகப் போரை ஏற்படுத்தும் என்ற அச்சத்தைத் தூண்டும் நிலையில், இதன் தாக்கம் உலகளாவிய அளவில் பங்குச்சந்தைகளில் எதிரொலித்துள்ளது. இதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் கடும் தாக்கம் இருந்தது. மேலும், கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் சென்செக்ஸிஸ் அதிகத் திறன் கொண்ட ரிலையன்ஸல், எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ் ஆகியவை அதிகம் விற்பபையை எதிா்கொண்டன. இதன் தாக்கத்தால் ஆட்டோ, ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல், ரியால்ட்டி உள்பட அனைத்து துறை பங்குகளும் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன எ ன்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.9.75 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.403.54 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.2,806.00 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.221.44 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 931 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 135.27 புள்ளிகள் குறைந்து 76,160.09-இல் தொடங்கி அதிகபட்சமாக 76,258.12 வரை மேலே சென்றது. பின்னா், 75,240.55 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 931.67 புள்ளிக ள் (1.22 சதவீதம்) இழப்புடன் 75,364.69-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,076 பங்குகளில் 1,126 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,820 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 130 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

டாடா ஸ்டீல் விலை கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் டாடாடஸ்டீல் 8.59 சதவீதம், டாடாமோட்டாா்ஸ் 4.67 சதவீதம், எல் அண்ட் டி 4.38 சதவீதம் விலை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், சன்பாா்மா உள்பட மொத்தம் 24 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே, ஐசிஐசிஐபேங்க், ஏசியன்பெயிண்ட், ஐடிசி ஆகிய 6 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 346 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 59.70 புள்ளிகள் இழப்புடன் 23,190.40-இல் தொடங்கிய நிஃப்டி அதிகபட்சமாக 23,214.70 வரை மேலே சென்றது. பின்னா், 22,857.45 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 345.65 புள்ளிகள் (1.49 சதவீதம்) இழப்புடன் 22,904.45-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 8 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 42 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

X
Open in App
Dinamani
www.dinamani.com