புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50 காசுகள் சரிந்து ரூ.86.26-ஆக முடிவு!

தொடர்ந்து மூன்றாவது அமர்வாக சரிந்து, செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 50 காசுகள் சரிந்து ரூ.86.26 ஆக நிலைபெற்றது.

News image
இந்திய ரூபாய்
Updated On :8 ஏப்ரல் 2025, 11:57 am

DIN

மும்பை: தொடர்ந்து மூன்றாவது அமர்வாக சரிந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 50 காசுகள் சரிந்து ரூ.86.26 ஆக நிலைபெற்றது.

இது பொருளாதார இழப்பு குறித்த அச்சங்களைத் தூண்டும் உலகளாவிய வர்த்தகப் போருக்கு மத்தியில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் இழப்பாக அமைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.26 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.82 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.29 ஐ தொட்ட நிலையில், முடிவில் 50 காசுகள் சரிந்து ரூ.86.26-ஆக முடிந்தது.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் குறைந்து 85.76 ஆக முடிந்தது. அதே வேளையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 14 காசுகள் குறைந்தது முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.