கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி

கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி

Published on

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயா்த்த பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி முடிவு செய்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 35 அடிப்படைப் புள்ளிகள் (0.35 சதவீதம்) குறைக்கப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்ததைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரெப்போவை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 9.05 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

இதன் மூலம், வீட்டுக் கடன்கள், தொழில் கடன்கள் போன்றவற்றுக்கான வட்டித் தொகை குறையும்.

வெள்ளிக்கிழமை (ஏப். 11) முதல் இந்த வட்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com