ஸியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மிகவும் வேகமான வாழ்க்கை முறையைக் கொண்ட பயனர்களைக் குறிவைத்து இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஸியோமி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ''குறிப்பிட்ட பயனர்களை இலக்காக வைத்து புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காலை நடைப்பயிற்சி, அலுவலக ஆலோசனைக் கூட்டம், அழைப்பு மேலாண்மை உள்ளிட்டவற்றை மேற்கொள்பவர்களுக்காக புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் சிறப்பம்சங்கள்
இந்திய சந்தையில் ரூ. 1,999-க்கு ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் கிடைக்கிறது. மே 1, 2025 முதல் நாட்டின் அனைத்து ஸியோமி கிளைகளிலும் இந்த வாட்ச் கிடைக்கும்.
நீலம், கருப்பு, சில்வர், தங்கம் என 4 வண்ணங்களில் ஸ்மார்ட் வாட்ச்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏப். 24ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது.
இதில் 140+ வொர்க் அவுட் மோட் உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் கண்காணிப்பு துல்லியம் 98.5% இருக்கும் என ரெட்மி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
ஆக்சிஜன் அளவு, அழுத்தம், தூக்கம் போன்றவற்றை கணக்கிட்டுக்கொள்ளலாம்.
1.85 அங்குல திரையுடன் 600nits வெளிச்சம் கொண்டது. இந்த வகை ஸ்மார்ட் வாட்ச் திரை இருளாமல், என்றுமே திரை வெளிச்சத்துடனே இருக்கும்.
அனைத்து கால நிலையிலும் அணிந்துகொள்ளும் வகையிலான பட்டையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஹைப்பர் ஓஎஸ் உதவியுடன் ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகளை ஸ்மார்ட் வாட்சிலும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாள்களுக்கு முழுப் பயன்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
இதையும் படிக்க | குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

ஏப்ரல் 15-ல் அறிமுகமாகிறது ஷாவ்மி ஸ்மார்ட் டிவி! எஸ் மினி எல்இடி!

6500mAh பேட்டரியுடன் வெளியான விவோ ஒய் 11, விவோ ஒய் 21

ஷாவ்மி 17, ஷாவ்மி 17 அல்ட்ரா விற்பனை தொடக்கம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


