முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! ஜகதீப் தன்கருக்கு திடீர் உடல்நலக் குறைவு! தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! பெரியார் அறிவுலக ஊழல்! ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? உயர்நீதிமன்றம் காட்டம்!நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

ரூபாய் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.85.44-ஆக முடிவு!

கச்சா எண்ணெய் விலை உயர்வு, இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.85.44 ஆக முடிந்தது.

PTI Graphics

Updated On :

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.85.44 ஆக முடிந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சரிந்தது.

வட்டி விகிதங்களைக் குறைக்காததற்காக ஃபெட் தலைவர் ஜெரோம் பவலுக்கு எதிரான விமர்சனங்களை தீவிரப்படுத்திய பல நாட்களுக்குப் பிறகு, நேற்று (செவ்வாய்க்கிழமை) ஃபெட் தலைவர் ஜெரோம் பவலை நீக்குவதற்கான அச்சுறுத்தல்களிலிருந்து டிரம்ப் பின்வாங்கிய பிறகு, சந்தை உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.24 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது குறைந்தபட்சமாக ரூ.85.52 ஐ தொட்டது. முடிவில் 25 காசுகள் சரிந்து ரூ.85.44 ஆக முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.85.19-ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.