
புதுதில்லி: கடந்த வார வர்த்தகத்தில், டாப் 10 மதிப்புமிக்க ஆறு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடானது ரூ.1,18,626.24 கோடியாக உயர்ந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதிகபட்ச லாபத்துடன் முன்னிலை வகிக்கிறது.
கடந்த வாரம், மும்பை பங்குச் சந்சையின் பெஞ்ச்மார்க் அளவீடு 0.83 சதவிகிதம் உயர்ந்த நிலையில் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 0.78 சதவிகிதம் உயர்ந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்த நிலையில் பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவற்றின் மதிப்பும் சரிந்தது.
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.53,692.42 கோடி அதிகரித்து ரூ.12,47,281.40 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.34,507.55 கோடி அதிகரித்து ரூ.17,59,276.14 கோடியாகவும், இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.24,919.58 கோடி அதிகரித்து ரூ.6,14,766.06 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.2,907.85 கோடி அதிகரித்து ரூ.14,61,842.17 கோடியாகவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் ரூ.1,472.57 கோடி அதிகரித்து ரூ.7,12,854.03 கோடியாகவும், ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,126.27 கோடி அதிகரித்து ரூ.5,35,792.04 கோடியாகவும் உள்ளது.
அதே வேளையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.41,967.5 கோடி சரிந்து ரூ.10,35,274.24 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10,114.99 கோடி சரிந்து ரூ.5,47,830.70 கோடியாகவும், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,863.83 கோடி சரிந்து ரூ.5,66,197.30 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.1,130.07 கோடி சரிந்து ரூ.10,00,818.79 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.