தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், சமீபத்திய வட்டி விகிதக் குறைப்புகள் 5.50 சதவிகிதம் மாற்றாமல் நிலையாக வைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

News image

மத்திய ரிசர்வ் வங்கி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 7:58 pm IST

மும்பை: வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்பாக 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும்.

இந்நிலையில், அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், சமீபத்திய வட்டி விகிதக் குறைப்புகள் 5.50 சதவிகிதம் மாற்றாமல் நிலையாக வைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது, வட்டி விகிதத்தை ஒருமனதாக நிலைநிறுத்தி, நடுநிலையான நிலைப்பாட்டைத் தொடர முடிவு செய்தது. இதனால் வீட்டு மற்றும் வாகன கடன்களின் மாதாந்திர தவணைகள் மாறாமல் நிலையாக இருக்கும்.

உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்து நீடித்துள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. அதே வேளையில், பணவீக்கம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்தாலும், இது பெரும்பாலும் நிலையற்ற உள்ள உணவு விலைகள் காரணமாகும் என்றார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.

ஆர்பிஐ கடந்த மூன்று கூட்டங்களில் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பை அமலாக்கம் செய்துள்ள நிலையில், தற்போது பொருளாதார வளர்ச்சி, பணவீக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு இக்கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை.

ஜூன் மாதத்தில் பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.10 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும் போது தெரியவரும். அதே வேளையில், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 6.5 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிப்பு உயர்த்துவதாக அச்சுறுத்தல்களை விடுத்தும், அதிகரித்தும் வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.