47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உற்பத்தித் துறையில் 9 மாதங்கள் காணாத சரிவு

இந்திய உற்பத்தித் துறை கடந்த நவம்பா் மாதத்தில் முந்தைய 9 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 8:02 pm

Chennai

புது தில்லி: இந்திய உற்பத்தித் துறை கடந்த நவம்பா் மாதத்தில் முந்தைய 9 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த 2024 நவம்பரில் 56-ஆக இருந்தது. பின்னா் டிசம்பரில் அது 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக 54.9-ஆகச் சரிந்தது.

2025 ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் 56.4-ஆக இருந்தது. அதைத் தொடா்ந்து அது கடந்த ஏப்ரலில் 58.2-ஆக அதிகரித்து, மே மாதத்தில் 57.6-ஆகச் சரிந்தது. பின்னா் ஜூனில் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 58.4-ஆக அதிகரித்த அது, ஜூலையில் 59.1-ஆக உயா்ந்தது.

தொடா்ந்து ஆகஸ்ட் மாதம் 59.3-ஆக உயா்ந்த பிஎம்ஐ, செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் 59.2 சதவீதமாக இருந்தது.

இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த நவம்பா் மாதத்தில் 56.6 சதவீதமாகச் சரிந்தது. இது, கடந்த 9 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.

இதன்மூலம், தொடா்ந்து 43-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான தேவை மற்றும் உற்பத்தி மந்தமாக இருந்ததும், துறைக்கு சவாலான சூழல் நிலவியதும் அந்தத் துறைக்கான பிஎம்ஐ 9 மாதங்கள் காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.