ஓப்போ நிறுவனத்தின் ஏ6எக்ஸ் 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று அறிமுகமாகியுள்ளது.
சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி அறிமுகமாகியுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி புராசஸர் மற்றும் அதிகப்படியான பேட்டரி இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது.
ஓப்போ ஏ6எக்ஸ் சிறப்புகள்
ஓப்போ ஏ6எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.5 அங்குல எல்.சி.டி. திரை கொண்டது.
திரை சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
திரை அதிக பிரகாசத்துடன் இருக்கும் வகையில் 1125nits திறன் கொண்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கலர் ஓஎஸ் 15 அடிப்படையிலான ஆண்டிராய்டு 15 கொண்டது.
6500mAh பேட்டரி திறன் உடையது. அதிகமாக சார்ஜ் செய்யும் வகையில் 45W திறன் கொண்டது.
நீலம் மற்றும் இளம் பச்சை நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4GB உள் நினைவகம் + 64GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 12,499.
இதையும் படிக்க | சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!
Summary
OPPO A6x 5G Launched in India: Price and Specifications
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

7,000mAh பேட்டரி உடன் அறிமுகமான ஓப்போ ஏ6சி!

விரைவில் விற்பனைக்கு வரும் ஓப்போ ஸ்மார்ட்போன்! விலை?

வருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?

ரியல்மி 16 விற்பனை இந்தியாவில் தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



