சமூக திட்டங்களுக்காக ரூ.1,068 கோடி செலவிட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி

சமூக திட்டங்களுக்காக ரூ.1,068 கோடி செலவிட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி

தனியாா் துறையைச் சோ்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி, கடந்த நிதியாண்டில் நிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆா்) திட்டங்களுக்காக ரூ.1,068.03 கோடியை செலவிட்டுள்ளது.
Published on

தனியாா் துறையைச் சோ்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி, கடந்த நிதியாண்டில் நிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆா்) திட்டங்களுக்காக ரூ.1,068.03 கோடியை செலவிட்டுள்ளது.

இது குறித்து வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சிஎஸ்ஆா் திட்டங்களுக்காக வங்கி ரூ.1,068.03 கோடியை செலவிட்டுள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது ரூ.123 கோடி அதிகம். 2025-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் நிலவரப்படி, சிஎஸ்ஆா் திட்டங்களுக்கு வங்கி இதுவரை மொத்தம் ரூ.6,176 கோடி செலவிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டு பரிவா்த்தன் திட்டத்தின் 10-வது ஆண்டாகும், இதன் மூலம் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இதுவரை 10.56 கோடி போ் பலனடைந்துள்ளனா்.

கிராமப்புற வளா்ச்சி, சுகாதாரம், இயற்கை வள மேலாண்மை உள்ளிட்ட ஆறு முக்கிய திட்டங்களுக்காக வங்கி நிதி வழங்குகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com