இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!
Published on
Updated on
1 min read

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வணிக நேர முடிவில் 5 காசுகள் சரிந்து ரூ. 85.73 ஆக நிலைபெற்றது.

தொடர்ச்சியாக அந்நிய முதலீடுகள் வெளியேறி வருதவதும், பங்குச் சந்தையில் நிலவும் சுணக்கம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து, டாலரின் மதிப்பு வலுப்பெற்று வருகிறது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.77-ஆக தொடங்கி, இன்றையை உச்சமான ரூ.85.65 ஐ தொட்ட நிலையில், வர்த்தக நேர முடிவில் 85.73-ஆக முடிந்தது.

இதையும் படிக்க: நேற்றைய சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

இது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து 85.73 ரூபாயாக நிலைபெற்றது.

இதே நிலை நீடித்தால், அடுத்து அடுத்து வரும் நாட்களிலும் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தே தொடரும் என்கின்றனர் இந்த துறை சார்ந்த நிபுணர்கள்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com