நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி; 58 காசுகள் சரிந்து ரூ.86.62-ஆக முடிவு!

இந்திய ரூபாய் வரலாற்று காணாத வீழ்ச்சியை எட்டியதால், இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிந்து முடிந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :13 ஜனவரி 2025, 1:05 pm

DIN

மும்பை: வலுவான டாலர் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக வரலாற்று காணாத வகையில் 58 காசுகள் சரிந்து ரூ.86.62 ஆக முடிந்தது.

இந்திய ரூபாய் வரலாற்று காணாத வீழ்ச்சியை எட்டியதால், இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் சரிந்து முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.12 ஆக தொடங்கி, இன்ட்ராடேவின் போது 1 காசு நகர்ந்து ரூ.86.11 ஆகவும், முடிவில் 58 காசு இழப்புடன் ரூ.86.62-ஆக முடிந்தது.

டிசம்பர் 30 அன்று ரூ.85.52 ஆக முடிவடைந்த இந்திய ரூபாய், கடந்த இரண்டு வாரங்களில் ஒரு ரூபாய்க்கும் அதிகமாக சரிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.