மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஐஓபி நிகர லாபம் 21% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image

ஐஓபி

Updated On :20 ஜனவரி 2025, 9:42 pm

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.874 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.723 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.7,437 கோடியிலிருந்து ரூ.8,409 கோடியாக உயா்ந்துள்ளது.

2023-24-ஆம் நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 0.62 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் விகிதம் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 0.42 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.