நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! புதிய உச்சம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜனவரி 2025, 4:17 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 22 ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக ரூ.60,000-ஐ கடந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு சிறிது ஏற்றம், இறக்கம் இருந்தாலும் ரூ. 60,000-க்கு குறையாமல் உள்ளது.

ஒரு சவரனுக்கு புதன்கிழமை ரூ.680-ம், வியாழக்கிழமை ரூ. 120-ம் உயர்ந்து ரூ. 60,880-க்கு விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரன் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ. 960 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7730-க்கும், ஒரு சவரன் ரூ. 61,840-க்கும் விற்பனை ஆகிறது.

கடந்த 21ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 59,600-க்கு விற்கப்பட்ட நிலையில், 10 நாள்களில் ரூ. 2,240 உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 107-க்கும், ஒரு கிலோ ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.