கோப்புப் படம்
கோப்புப் படம்

ஐடி, ஆட்டோ பங்குகளின் சரிவை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

சென்செக்ஸ் 689.81 புள்ளிகள் சரிந்து 82,500.47 புள்ளிகளாகவும், நிஃப்டி 205.40 புள்ளிகள் சரிந்து 25,149.85 புள்ளிகளாக நிலைபெற்றது.
Published on

மும்பை: தொடர்ந்து 3வது நாளான இன்றும் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன. இன்றயை வர்த்தகத்தில் ஐடி, ஆட்டோ மற்றும் எரிசக்தி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்பனையால் செய்ததால், உள்ளூர் வர்த்தகம் சுமார் 1% சரிவுடன் முடிந்தது.

வரி தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளும் மத்தியில் உலகளாவிய பங்குச் சந்தையின் போக்கும் வெகுவாக அழுத்தத்தை சந்தித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 748.03 புள்ளிகள் சரிந்து 82,442.25 ஆக இருந்தது. வர்த்தக நேர முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ குறியீடான சென்செக்ஸ் 689.81 புள்ளிகள் சரிந்து 82,500.47 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 205.40 புள்ளிகள் சரிந்து 25,149.85 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்த பிறகு 3.46 சதவிகிதம் சரிந்தது.

நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இந்நிறுவனம், ஜூன் வரையான காலாண்டில் 6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்த நிலையிலும் அதன் நிகர லாபம் ரூ.12,760 கோடியாக இருந்தது.

நிறுவனங்களின் முதல் காலாண்டு வருவாய் தொடக்கம் நிதானமான இருப்பதாலும், அமெரிக்கா கனடா மீது விதிக்க உள்ள 35 சதவிகித கட்டண அச்சுறுத்தலாலும் உள்ளூர் பங்குச் சந்தை சரிவை நோக்கி பயணித்தது.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், டைட்டன், எச்.சி.எல். டெக், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிரென்ட், இன்ஃபோசிஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் சரிந்த நிலையில் ஆக்ஸிஸ் வங்கி, என்டிபிசி, எடர்னல் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை உயர்ந்து முடிந்தன.

நிஃப்டி-யில் டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ, எம் அண்ட் எம், ஹீரோ மோட்டோகார்ப், விப்ரோ சரிந்த அதே நேரத்தில் ஹெச்யுஎல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை உயர்ந்து முடிந்தன.

எஃப்எம்சிஜி குறியீடு 0.5% மற்றும் மருந்து குறியீடு 0.7% உயர்வுடன் முடிந்த நிலையில் மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிவில் முடிவடைந்தன. ஆட்டோ, ஐடி, மீடியா, எண்ணெய் மற்றும் எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், மூலதன பொருட்கள், ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு ஆகியவை தலா ஒரு சதவிகிதம் சரிந்தன.

ஆகஸ்ட் 1, 2025 முதல் பிரியா நாயர் நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பதவியேற்பார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 4.61 சதவிகிதம் வரை உயர்ந்தன.

க்ளென்மார்க் பார்மா, அசாஹி இந்தியா, ஈஐடி பாரி, ராம்கோ சிமென்ட்ஸ், ஜேகே சிமென்ட், ஜேகே லட்சுமி சிமென்ட், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.

ஆசிய சந்தைகள், தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்தன, அதே நேரத்தில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.31 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 68.85 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.221.06 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: ஒருமுறை சார்ஜுக்கு 142 கி.மீ. பயணம்! ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்!

Summary

The 30-share BSE Sensex dropped 398.45 points to 82,791.83 in early trade. The 50-share NSE Nifty declined 111.25 points to 25,244.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com