வங்கிப் பங்குகளின் வீழ்ச்சியை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 501.51 புள்ளிகள் சரிந்து 81,757.73 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 143.05 புள்ளிகள் சரிந்து 24,968.40 ஆக நிலைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

மும்பை: நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முடிவுகள் மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வங்கிப் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுன் முடிவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 651.11 புள்ளிகள் சரிந்து 81,608.13 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ குறியீடான சென்செக்ஸ் 501.51 புள்ளிகள் சரிந்து 81,757.73 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 143.05 புள்ளிகள் சரிந்து 24,968.40 ஆக நிலைபெற்றது.

சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஆக்சிஸ் வங்கியின் சமீபத்திய நிதி முடிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, முதலீட்டாளர்கள் வங்கிப் பங்குகளில் எச்சரிக்கையாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 3 சதவிகிதம் சரிந்து ரூ.6,243.72 கோடியாக இருந்ததாக அறிவித்ததையடுத்து, ஆக்சிஸ் வங்கி 5.24 சதவிகிதம் சரிந்தன. அதே வேளையில் ஜூன் வரையான காலாண்டில் உலகளாவிய வைப்புத்தொகையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆக்சிஸ் வங்கியின் ஜிடிஆர் (GDR) 4.8 சதவிகிதம் சரிந்து $64.30 ஆக உள்ளது.

ப்ளூ-சிப் வங்கி பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை சரிவுடன் முடிந்தன.

வங்கிப் பங்குகள் சரிவைத் தொடர்ந்து, பிஎஸ்இ வங்கி குறியீடு 1.33 சதவிகிதம் சரிந்து 62,741.65 புள்ளிகளாக நிறைவடைந்தது.

சென்செக்ஸில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, டைட்டன் மற்றும் எடர்னல் ஆகியவை சரிந்த நிலையில் பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, எச்சிஎல் டெக் மற்றும் இன்போசிஸ் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

நிஃப்டி-யில் ஆக்சிஸ் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எச்டிஎஃப்சி லைஃப், பாரதி ஏர்டெல் ஆகியவை சரிந்த நிலையில் விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, நெஸ்லே இந்தியா ஆகியவை உயர்ந்து முடிந்தன.

குஜராத் மினரல், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல், டால்மியா பாரத், ஜேகே சிமென்ட், நுவோகோ விஸ்டாஸ், ஆனந்த் ரதி, எச்டிஎஃப்சி ஏஎம்சி, பயோகான், பிரமல் எண்டர்பிரைசஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ஆர்பிஎல் வங்கி உள்ளிட்ட 140 பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.3,694.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி மற்றும் ஜப்பான் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்த நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து முடிந் நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.92 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 70.16 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: 15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!

Summary

Sensex tanks 651 points on foreign fund outflows, selling in bank stocks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com