
இணைய விற்பனை தளமான அமேசானில் சுதந்திர தினத்தையொட்டிய சலுகைகள் ஜூலை 31ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
கடந்த மாதம், பிரைம் பயனர்களுக்காக மட்டுமே சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் வகையில் இச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்தமுறை குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தமுறை ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் என பலவற்றுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், பணத்தை சேமிக்கும் வகையில், ஒவ்வொரு பொருளுக்கும் கவர்ச்சிகரமான ஒப்பந்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், கூடுதல் பலன்களாக குறிப்பிட்டப் பொருள்களுடன் வழங்க இலவச பொருட்கள், கூப்பன்கள், யுபிஐ விளம்பரங்கள், முன்பணம் இல்லாத தவணை முறை, வட்டியில்லா தவணை போன்ற சலுகைகளும் அடங்கியுள்ளன.
தாங்கள் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களை மேம்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் இந்த சலுகை காலத்தைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கலாம் என அமேசான் தெரிவித்துள்ளது.
கடன் அட்டை தள்ளுபடி
எஸ்பிஐ வங்கிக் கணக்கின் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) பயன்படுத்துபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தவணை முறையில் வாங்குபவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். பழைய சாதனங்களை மாற்றி, புதிய சாதனங்களை வாங்குபவர்களுக்கும் சலுகை உள்ளது.
எந்தெந்த சாதனங்களுக்கு விலை குறையும்
பெருமளவு மக்களால் அதிகம் விரும்பப்படும் சில மின்னணு பொருள்களுக்கு அமேசான் நிறுவனம் குறிப்பிடத்தகுந்த சலுகைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, சாம்சங் கேலக்ஸி எஸ் 24 அல்ட்ரா - விலை ரூ. 79,999 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் விலை ரூ. 81,999.
ஒன்பிளஸ் வாட்ச் 2 - விலை ரூ. 13,499. தற்போது இதன் விலை ரூ. 15,999
அமேசான் எக்கோ பாப் - விலை ரூ. 3,949. இதன் உண்மை விலை ரூ. 4,499
ஹெச்பி 15 மடிக்கணினி (13ஆம் தலைமுறை இன்டெல் ஐ 7) - விலை ரூ. 62,990. தற்போது இதன் விலை ரூ. 65,990.
அமேசான் சுதந்திர தின சலுகை முடியும் நாள் குறித்து எந்தவித அறிவிப்பையும் அமேசான் அறிவிக்கவில்லை. அதனால், சலுகை ஆரம்பித்த உடனேயே பொருள்களை வாங்குவது சிறந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | நீருக்குள் கூட புகைப்படம் எடுக்கலாம்: ஆக. 4-ல் அறிமுகமாகிறது விவோ ஒய் 400!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.