இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

3 நாள் சரிவுக்கு பிறகு சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

சென்செக்ஸ் 260.74 புள்ளிகள் உயர்ந்து 80,998.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 77.70 புள்ளிகள் உயர்ந்து 24,620.20 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

News image
கோப்புப் படம்.
Updated On :4 ஜூன் 2025, 11:42 am

DIN

மும்பை: உலக சந்தைகள் நேர்மறையாக வர்த்தகமான நிலையில் உள்ளூர் சந்தையில் ரியல் எஸ்டேட் தவிர மற்ற அனைத்து துறைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை கொள்முதல் செய்ததன் காரணமாக இந்திய குறியீடுகள் மூன்று நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று உயர்ந்து முடிந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 230.17 புள்ளிகள் உயர்ந்து 80,967.68 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70.25 புள்ளிகள் உயர்ந்து 24,612.75 புள்ளிகளாக இருந்தது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 260.74 புள்ளிகள் உயர்ந்து 80,998.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 77.70 புள்ளிகள் உயர்ந்து 24,620.20 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

சென்செக்ஸில் பாரதி ஏர்டெல், எடர்னல், இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிந்தன.

நிஃப்டியில் எடர்னல், ஜியோ ஃபைனான்சியல், பாரதி ஏர்டெல், இண்டஸ்இண்ட் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்தும் அதே நேரத்தில் டிரெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிசிஎஸ், ஆக்சிஸ் பேங்க் ஆகியவை சரிந்து முடிந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

துறை ரீதியாக, பிஎஸ்இ ரியாலிட்டி குறியீடு 0.7 சதவிகிதம் சரிந்தது, அதே நேரத்தில் தொலைத்தொடர்பு, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் 0.5 முதல் 1 சதவிகிதம் வரை அதிகரித்தன.

என்விடியா மற்றும் பிற சிப்மேக்கர்களில் லாபம் உயர்ந்ததையடுத்து நேற்றை வர்த்தகத்தில் அமெரிக்க பங்கு குறியீடுகள் உயர்ந்தன. அதே வேளையில் கட்டணத் திட்டங்கள் குறித்து மேலும் தெளிவு பெறுவதற்காக பேச்சுவார்த்தைகளுக்காக காத்திருந்தனர்.

தொழில்நுட்ப பங்குகளால் ஆசிய பங்குகள் உயர்ந்தன. அதே நேரத்தில் ஐரோப்பிய பங்குகள் சிஏசி மற்றும் டிஏஎக்ஸ் தலா 1 சதவிகிதம் வரை உயர்ந்து வர்த்தகமானது.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், ஆதித்யா பிர்லா ஃபேஷன் & ரீடெய்ல் பங்குகள் 6.2% பங்குகள் பிளாக் டீலில் கைமாறியதால் 10% வரை சரிந்தன. பிளாக் டீலில் 1.4% பங்குகள் கைமாறியதால் அல்கெம் லேபரேட்டரீஸ் பங்குகள் 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தன.

நாள்பட்ட தோல் நோய் மருந்து சோதனைகளில் பலன் அளிக்காததால் சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனி லிமிடெட் பங்குகள் 20% வரை சரிந்து முடிந்தன.

கார்டன் ரீச், கிளாக்சோ ஸ்மித்க்லைன் பார்மா, ஏபிஎல் அப்பல்லோ, லாயிட்ஸ் மெட்டல்ஸ், எஸ்பிஐ கார்டுகள், அனுபம் ரசாயன், ராடிகோ கைதன், ஹிட்டாச்சி எனர்ஜி, சோலார் இண்டஸ்ட்ரீஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அஸ்ட்ராஜெனெகா பார்மா, பாரதி ஹெக்ஸாகாம், சிசிஎல் தயாரிப்புகள், சிட்டி யூனியன் வங்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச சந்தையில் 52 வார உச்சத்தை பதிவு செய்தன.

ஐபிஓ பட்டியலில், ஸ்கோடா டியூப்ஸ் பங்குகள் பங்குச் சந்தையில் அறிமுகமான பிறகு 5 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.