மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.
ரிசர்வ் வங்கி ஜம்போ விகிதக் குறைப்புடன் சந்தையை ஆச்சரியப்படுத்தியதால், ரூபாய் மதிப்பு சீராக வர்த்தகம் செய்யப்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும், உள்நாட்டு சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியை தொடர்ந்து, இந்திய ரூபாய் 1% அதிகமான உயர்ந்து நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.91 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.66 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86 ஐ தொட்ட நிலையில், முடிவில் 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அதன் இரண்டு நாள் தொடர் சரிவை முறியடித்து டாலருக்கு நிகராக 8 காசுகள் உயர்ந்து ரூ.85.79 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.04! 14 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


