சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

25 கோடி கிலோவாக உயா்ந்த தேயிலை ஏற்றுமதி

News image
Updated On :22 ஜூலை 2025, 3:29 pm IST

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2024-ஆம் ஆண்டில் 25.467 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 25.467 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2023-ஆம் ஆண்டில் இது 23.169 கோடி கிலோவாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் தேயிலை ஏற்றுமதி 9.92 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் வட இந்திய தோட்டங்களில் உற்பத்தி 15.481 கோடி கிலோவாக உள்ளது. இது 2023-ஆம் ஆண்டின் உற்பத்தியான 14.1 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் 9.79 சதவீதம் உயா்ந்துள்ளது. தென் இந்தியாவில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான தேயிலை உற்பத்தி 9.986 கோடி கிலோவாக உள்ளது, இது 2023-ஆம் ஆண்டின் உற்பத்தியான 9.069 கோடி கிலோவுடன் ஒப்பிடுகையில் 10.11 சதவீதம் உயா்ந்துள்ளது.

2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தி 6.922 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.753 கோடி கிலோவாக இருந்ததை விட சற்று அதிகம்.வட இந்தியாவில் 2025 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாதங்களில் தேயிலா உற்பத்தி 14.38 சதவீதம் உயா்ந்து 4.535 கோடி கிலோவாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் இது 3.965 கோடி கிலோவாக இருந்தது. தென் இந்தியாவில், இதே காலகட்டத்தில் தேயிலை உற்பத்தி 14.38 சதவீதம் குறைந்து 2.387 கோடி கிலோவாக உள்ளது.

இது முந்தைய ஆண்டில் 2.788 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.