பழசுக்கு புதுசு... ஹூண்டாய் அல்கஸார் கார்ப்பரேட் அறிமுகம்!

ஹூண்டாயின் அல்கஸாரில் புதிதாக கார்ப்பரேட் வேரியன்டு அறிமுகம்
ஹூண்டாய் அல்கஸார்
ஹூண்டாய் அல்கஸார்Hyundai
Published on
Updated on
2 min read

ஹூண்டாயின் அல்கஸாரில் புதிதாக கார்ப்பரேட் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா ரக கார்கள், 2021 ஆம் ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், கிரெட்டாவின் அல்கஸார் காரை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால், மஹிந்திராவின் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி700 (XUV700) கார்களின் ஆதிக்கத்தால், அல்கஸாரின் விற்பனை பெரிதளவில் பாதிக்கப்பட்டதாய் இருந்தது.

இந்த நிலையில், அல்கஸாரின் வேரியன்டுகளில் ஏதேனும் மாற்றம் செய்தால், விற்பனை அதிகரிக்குமா என்ற கோணத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், புதிதாக ஓர் இடைநிலை வேரியன்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக எக்ஸிக்யூட்டிவ், பிரஸ்டீஜ், பிளாட்டின், சிக்னேச்சர் என நான்கு வேரியன்ட்களில் அல்கஸார் கார்கள் இருந்தன. தற்போது, பிரஸ்டீஜ், பிளாட்டின் வேரியன்டுகளுக்கு இடையே கார்ப்பரேட் என்ற புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கார்ப்பரேட் வேரியன்டு காரை 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் வாங்கலாம். இந்த டீசல் வேரியன்டு காரில் குரல்வழி கட்டளை (Voice Assistant) மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்மார்ட் பனோரமிக் சன்ரூஃபும் (Panoramic Sunroof) வருகிறது. டீசல் என்ஜின் கார்ப்பரேட் வேரியன்டு 6-ஸ்பீடு மேனுவல் (Manual) மற்றும் ஆட்டோமேட்டிக் (Automatic) கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

dot com

இதனுடன், பிரெஸ்டீஜ் பெட்ரோல் வேரியன்டிலும் புதிதாக 7-ஸ்பீடு டிசிடீ (Dual Clutch Transmission) கியர்பாக்ஸ் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ஆட்டோமேட்டிக் பெட்ரோல் வேரியன்டில் அல்கஸார் காரை, குறைந்த விலையில் (ரூ. 2.30 லட்சம் வரையில் குறைவாக) வாங்குவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

7 இருக்கைகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த 2 புதிய வேரியன்டுகளிலும் தகவல் பொழுதுபோக்கு அமைப்புடன் கூடிய எச்டி தரத்திலான 10.25 அங்குலத் திரை, ஹூண்டாயின் குரல் கட்டளை அமைப்பு வசதி, ஆன்ட்ராய்டு அல்லது ஐபோனை இணைக்கும் வசதி (Wireless), போன் சார்ஜர் வசதி (Wireless), தானியங்கி காலநிலை கட்டுப்பாடு வசதி (Dual-zone Climate control), உயர்தரத்திலான விளக்குகள், 6 ஏர்பேக்குகள் உள்பட பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்றவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மேனுவல் கியர்பாக்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அல்கஸார் கார்ப்பரேட் டீசல் மேனுவல் ரூ. 17.87 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அல்கஸார் கார்ப்பரேட் டீசல் ஆட்டோமேட்டிக் ரூ. 19.29 லட்சமாகவும், அல்கஸார் பிரஸ்டீஜ் பெட்ரோல் டிசிடீ (DCT) ரூ. 18.64 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி! லண்டனில் தவிக்கும் மகள்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com