ரூ.25,000 கோடி திரட்ட எஸ்பிஐ திட்டம்

தகுதியுடைய நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு (க்யுஐபி) செய்வதன் மூலம் ரூ.25,000 கோடி மூலதனம் திரட்ட இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
ரூ.25,000 கோடி திரட்ட எஸ்பிஐ திட்டம்
Updated on

மும்பை: தகுதியுடைய நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு (க்யுஐபி) செய்வதன் மூலம் ரூ.25,000 கோடி மூலதனம் திரட்ட இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

க்யுஐபி மூலம் ரூ.25,000 கோடி மூலதனம் திரட்ட வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, தகுதியுடைய முதலீட்டு நிறுவனங்களை அணுகி, இதுதொடா்பான தங்களது முன்வரைவுகளை சமா்ப்பிக்க வங்கி அழைப்பு விடுத்துள்ளது. முதலீட்டு நிறுவனங்கள் இந்த வாரத்துக்குள் தங்கள் முன்வரைவுகளை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கூடுதல் மூலதனம் திரட்ட வங்கியின் இயக்குநா்கள் குழு கடந்த மே 3-ஆம் தேதி அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக, க்யுஐபி மூலம் எஸ்பிஐ கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.18,000 கோடி திரட்டியது. அதற்குப் பிறகு தற்போதுதான் அந்த முறையில் மூலதனம் திரட்ட வங்கி திட்டமிட்டுள்ளது என்று வங்கி வட்டாரங்கள் கூறின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com