திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!தமிழக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

ஐந்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.93 ஆயிரம் கோடியாக சரிவு!

சென்செக்ஸில் உள்ள முதல் 10 அதிக மதிப்புள்ள ஐந்து நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் ரூ.93,357.52 கோடியாக சரிந்தது முடிந்தது.

கோப்புப் படம்

Updated On :

புதுதில்லி: சென்செக்ஸில் உள்ள முதல் 10 அதிக மதிப்புள்ள ஐந்து நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனம் ரூ.93,357.52 கோடியாக சரிந்தது முடிந்தது. இது உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்குக்கு ஏற்ப, ஐடி ஜாம்பவான்களான இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் மிக பெரிய அளவில் பாதித்தது.

கடந்த வாரம், சென்செக்ஸ் 503.67 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 155.3 புள்ளிகள் சரிந்தது வர்த்தகமான நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் சந்தை மதிப்பீடு சரிந்த நிலையில், இதற்கு மாறாக ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை உயர்ந்து முடிந்தது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.44,226.62 கோடியாக குறைந்து ரூ.6,55,820.48 கோடியாகவும், டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பீடு ரூ.35,800.98 கோடியாக குறைந்து ரூ.12,70,798.97 கோடியாக சரிந்ததையடுத்து, நாட்டின் 10 மதிப்புமிக்க நிறுவனங்களின் அட்டவணையில் இது மூன்றாவது இடத்திற்கு சென்றது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.6,567.11 கோடியாக குறைந்து ரூ.5,11,235.81 கோடியாகவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் ரூ.4,462.31 கோடியாக குறைந்து ரூ.6,49,489.22 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் ரூ.2,300.50 கோடியாக குறைந்து ரூ.16,88,028.20 கோடியாகவும் உள்ளது.

எனினும் ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது ரூ.25,459.16 கோடியாக அதிகரித்து ரூ.8,83,202.19 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பானது  ரூ.12,591.60 கோடியாக அதிகரித்து ரூ.13,05,169.99 கோடியாகவும், ஐடிசி-யின் சந்தை மதிப்பானது ரூ.10,073.34 கோடியாக அதிகரித்து ரூ.5,15,366.68 கோடியாகவும், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.911.22 கோடியாக அதிகரித்து ரூ.5,21,892.47 கோடியாகவும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.798.30 கோடியாக அதிகரித்து ரூ.9,31,068.27 கோடியாக உயர்ந்தது.

மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருப்பதை தொடர்ந்து, எச்.டி.எஃப்.சி வங்கி, டி.சி.எஸ், பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐ.டி.சி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.