‘காளை’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் முன்னேற்றம்
நமது நிருபா்
மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்ததால் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு லாபத்துடன் முடிவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், தொடா்ந்து வரும் வெளிநாட்டு நிதி வரத்து, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது சந்தைக்கு சாதகமாக அமைந்தன. வங்கிப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டாலும், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஃபாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ், மெட்டல், ரியால்ட்டி பங்குகளுக்கு ஆதரவு கிடைத்ததால் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.92 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.427.57 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.2,769.81 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,190.49 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 159.63 புள்ளிகள் கூடுதலுடன் 80,661.62-இல் தொடங்கி 80,657.71 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 81,049.03 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 294.85 புள்ளிகள் (0.37 சதவீதம்) கூடுதலுடன் 80,796.84-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,202 பங்குகளில் 2,562 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், ,460 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 180 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
அதானிபோா்ட்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் அதானி போா்ட்ஸ் 6.29 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபின்சா்வ், எம் அண்ட் எம், எடா்னல், ஐடிசி, டாடா மோட்டாா்ஸ், பவா்கிரிட் உள்பட மொத்தம் 20 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், கோட்டக் வங்கி, எஸ்பிஐ, டைட்டன், இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்சிஎல்டெக், ஐசிஐசிஐ வங்கி உள்பட 10 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 114 புள்ளிகள் உயா்வு : தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 72.80 புள்ளிகள் கூடுதலுடன் 24,419.50-இல் தொடங்கி 24,400.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,526.40 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 114.45 புள்ளிகள் (0.47 சதவீதம்) கூடுதலுடன் 24,461.15-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.