அதிகபட்ச பேட்டரி திறனுடன் வருகிறது ரியல்மீ ஜிடி!

ஸ்மார்ட்போன் உலகில் இதுவரை இல்லாத வகையில் 10000mAh பேட்டரி திறனுடன் ரியல்மீ ஜிடி உருவாகி வருகிறது.
ரியல்மீ ஜிடி
ரியல்மீ ஜிடிபடம் / நன்றி - ரியல்மீ
Published on
Updated on
1 min read

ஸ்மார்ட்போன் உலகில் இதுவரை இல்லாத வகையில் 10000mAh பேட்டரி திறனுடன் ரியல்மீ ஜிடி உருவாகி வருகிறது.

பல முன்னணி நிறுவனங்களின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்ட ஸ்மாட்ர்போன்கள் கூட இந்த அளவுக்கு பேட்டரி திறன் கொண்டதாக இல்லை.

இதனிடையே பேட்டரியில் கூடுதல் திறனை வழங்குவதன் மூலம் பயனர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ரியல்மீ.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல்மீ நிறுவனம், இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த பயனர்களைக் கொண்டுள்ளது. ஷாவ்மி, ஓப்போ, விவோ நிறுவனங்களுக்குப் போட்டியாக ரியல்மீ நிறுவனமும் பல புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில், ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத வகையில் 10000mAh திறன் கொண்ட ஸ்மாட்ர்போனை ரியல்மீ உருவாக்கவுள்ளது. இதன் சோதனை முயற்சிகளில் அந்நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. இதற்காக 320mAh அதிவேக சார்ஜ் செய்யும் அம்சத்தையும் வழங்கவுள்ளது.

இதற்காக அதிகபட்ச சிலிகான் தனிமங்களைச் சேர்த்து ஆனோடு பேட்டரிகளை உருவாக்குகிறது. இதன்மூலம் எடையைக் கூட்டாமல், பேட்டரியின் திறனை மட்டும் அதிகரிக்க இயலும். இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் அம்சங்கள் மக்கள் தேவைகளை நிறைவு செய்யுமாயின், பல பயனர்களின் தேர்வு ரியல்மீ ஜிடி-யாகவே இருக்கும்.

ஸ்மார்ட்போன்களில் நிலவும் பேட்டரி திறன் பற்றாக்குறை, பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை என்பதை உணர்ந்து, அதனை நிறைவு செய்யும் வகையில், இந்த ஸ்மார்ட்போனை ரியல்மீ உருவாக்குகிறது.

ரியல்மீ ஜிடியின் மற்ற அம்சங்கள் குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அந்த அம்சங்களும் மற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் கேமராவில் மாற்றம் செய்கிறது ஆப்பிள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com