கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! தாராபுரம்: கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

ஏடிஎம் குறித்த வதந்திக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மறுப்பு!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அனைத்து ஏடிஎம் நெட்வொர்க்குகளும் செயல்பாட்டில் உள்ளதாக விளக்கமளித்ததுடன், அவை மூடப்படுவதாக வரும் வதந்திகள் தவறானவை என்று மறுத்துள்ளது.

iob

Published On :

சென்னை: பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அனைத்து ஏடிஎம் நெட்வொர்க்குகளும் செயல்பாட்டில் உள்ளதாக விளக்கமளித்ததுடன், அவை மூடப்படுவதாக வரும் வதந்திகள் தவறானவை என்று மறுத்துள்ளது.

வழக்கம் போல் ஏடிஎம் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த தங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கி கேட்டுகொண்டுள்ளது.

எங்களது ஏடிஎம் சேவை தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதாக வங்கி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. அதே வேளையில் ஏடிஎம் மையங்கள் மூடப்படுவதாக பரவும் வதந்திகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தகவல்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தனது வாடிக்கையாளர்களை 1800 425 4445 மற்றும் 1800 890 4445 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.