/

யெஸ் வங்கியின் 13% பங்குகளை விற்பனை செய்த எஸ்பிஐ!

யெஸ் வங்கியின் 13.19% பங்குகளை ஜப்பானின் சுமிடோமோ மிட்சுயி பேங்கிங் கார்ப்பரேஷனுக்கு 8,889 கோடி ரூபாய்க்கு விற்க எஸ்பிஐ இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

News image

எஸ்பிஐ

Updated On :9 மே 2025, 7:28 pm IST

புதுதில்லி: தனியார் வங்கியான யெஸ் வங்கியின் 13.19% பங்குகளை ஜப்பானின் சுமிடோமோ மிட்சுயி பேங்கிங் கார்ப்பரேஷனுக்கு 8,889 கோடி ரூபாய்க்கு விற்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

யெஸ் வங்கியின் 413.44 கோடி பங்குகளை ரூ.8,888.97 கோடிக்கு விற்க வங்கியின், மத்திய வாரியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஒரு பங்கின் விலை ரூ.21.50 என்று நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2025 நிலவரப்படி எஸ்பிஐ யெஸ் வங்கியில் 24 சதவிகித பங்குகளை எஸ்பிஐ வைத்திருந்தது என்று பிஎஸ்இ வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.