மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ.85.37 ஆக முடிவு!

அமெரிக்க நாணயக் குறியீட்டில் ஏற்பட்ட மீட்சி, உள்நாட்டில் பங்குச் சந்தையின் எதிர்மறையான போக்கும் மற்றும் அந்நிய நிதி வரத்து மந்தமாக இருந்ததைத் தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 27 காசுகள் சரிந்து ரூ.85.37 ஆக முடிந்தது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு

Published On :

மும்பை: அமெரிக்க நாணயக் குறியீட்டில் ஏற்பட்ட மீட்சி, உள்நாட்டில் பங்குச் சந்தையின் எதிர்மறையான போக்கும் மற்றும் அந்நிய நிதி வரத்து மந்தமாக இருந்ததைத் தொடர்ந்து, இன்றைய அந்நிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 27 காசுகள் சரிந்து ரூ.85.37 ஆக முடிந்தது.

ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை மற்றும் உற்பத்தி உற்பத்தி தரவு நாளை வெளியிடப்படவுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்த நிலையில், இந்த வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ள முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்கள் குறித்தும் நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.15 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.11 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.45 ஐ தொட்ட நிலையில், முடிவில் 27 காசுகள் சரிந்து ரூ.85.37-ஆக முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 35 காசுள் அதிகரித்து ரூ.85.10-ஆக நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.