

மும்பை: நகை சில்லறை விற்பனையாளரான பி என் காட்கில் ஜுவல்லர்ஸ், வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த வருடம் இருந்ததை விட இரண்டு மடங்குகளாக அதிகரித்து ரூ.79.31 கோடியாக உள்ளது என்றது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.34.92 கோடியாக இருந்தததாக தெரிவித்தது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து வருவாய் 8.80% அதிகரித்து ரூ.2,177.62 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.2,001.31 கோடியாக இருந்தது. அதே வேளையில் சில்லறை வணிகத்தால் வழிநடத்தப்படும் அனைத்து பிரிவுகளிலும் நாங்கள் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் செயல்திறன் பதித்து உள்ளோம்.
இந்த காலாண்டில், நிறுவனம் மும்பையின் தாதரில் தனது முதல் கிளையைத் தொடங்கியது. மகாராஷ்டிரத்தில் எங்கள் இருப்பை இது மேலும் வலுப்படுத்தியது. அதே வேளையில் நாங்கள் விரிவடைந்து, உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் புதிய சந்தைகளில் நுழைந்துள்ளோம்.
நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 0.96% உயர்ந்து ரூ.670.60 ஆக முடிவடைந்தன.
இதையும் படிக்க: ஈ.எஃப்.சி இந்தியா 2-வது காலாண்டு லாபம் 55% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.