

புதுதில்லி: குஜராத் கனிம மேம்பாட்டுக் கழகம் (GMDC) செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 264% உயர்ந்து ரூ.465.75 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் ரூ.127.86 கோடியாக இருந்தது. இருப்பினும், இந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.655.40 கோடியிலிருந்து ரூ.635.76 கோடியாகக் குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
குஜராத் கனிம மேம்பாட்டுக் கழகம் இந்தியாவின் முன்னணி சுரங்க மற்றும் கனிம பதப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.73 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.