
மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் ஆகிய காரணங்களால், இன்றைய டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் வரலாறு காணாத குறைந்த மட்டத்திலிருந்து 9 காசுகள் மீண்டு ரூ.88.06 ஆக நிலைபெற்றது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக கட்டணக் கவலைகள் காரணமாக தொடர்ந்து, அந்நிய நிதி வெளியேற்றம் அதிகரிப்பும், ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவிற்கு சென்றதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.15 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.87.98 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.88.19ஐ தொட்ட நிலையில், முடிவில் 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06-ஆக முடிந்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.88.15 ஆக இருந்தது.
இதையும் படிக்க: நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.