பங்குச்சந்தைகள் இன்று(ஏப். 9, வியாழக்கிழமை) கடும் சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,319.33 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 931.25 புள்ளிகள் குறைந்து 76,631.65 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 222.25 புள்ளிகள் குறைந்து 23,775.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
நிஃப்டி 50 குறியீட்டில் ஜியோ, எல்&டி ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் பவர் கிரிட், என்டிபிசி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டாடா ஸ்டீல், பெல், ஐடிசி, சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.25 சதவீதம், 0.20 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின.
துறை வாரியாக, நிஃப்டி வங்கிகள், தனியார் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி உலோகப் பங்குகள் உயர்ந்தன.
பிரெண்ட் கச்சா எண்ணெய் இன்று ஒரு பீப்பாய் 97.85 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தக நேர முடிவில் 92.63 ஆக இருந்தது.
Summary
Stock Market : Sensex drops 931 points, Nifty below 23,800
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலையாக வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி, மீடியா பங்குகள் உயர்வு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஆட்டோ, வங்கிப் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 789, நிஃப்டி 277 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள், நிஃப்டி 250 புள்ளிகள் உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



