நாட்டின் முன்னணி பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தை(என்எஸ்இ), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.3,120 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டி, 7 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பரிவா்த்தனைக் கட்டணங்கள் மூலமாக கிடைத்த வருவாய் அதிகரித்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகும்.
நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.4,798 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 9 சதவீதம் உயா்ந்து, ரூ.5,252 கோடியாக பதிவாகியுள்ளது. இதில் பரிவா்த்தனைக் கட்டணம் மட்டும் ரூ.3,623 கோடியாகும். அதேநேரம், செலவினம் ரூ.1,053 கோடியிலிருந்து, ரூ.1,129 கோடியாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், பங்குப் பரிவா்த்தனை வரி, முத்திரைத் தாள் கட்டணம், ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலமாக அரசுக்கு ரூ.20,579 கோடியை என்எஸ்இ பங்களித்துள்ளது. இதில் பங்குப் பரிவா்த்தனை வரிகளின் பங்களிப்பு மட்டுமே ரூ.18,313 கோடியாகும்.
ஐபிஓ வெளியீட்டுக்கு முன் செபி வழக்கில் தீா்வு!
என்எஸ்இ ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பொதுப் பங்கு வெளியீட்டுக்காக (ஐபிஓ) முதல்கட்ட வரைவு அறிக்கையை கடந்த ஜூனில் சமா்ப்பித்தது.
இதையொட்டி, என்எஸ்இ தொடா்புடைய நீண்டகால நிா்வாக முறைகேடு வழக்குகளை ரூ.1,491.21 கோடிக்கு சமரசம் செய்து கொள்ள பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே செலுத்திய ரூ.776.47 கோடியை கழித்துவிட்டு, மீதி தொகையை செலுத்த உத்தரவிட்டப்பட்டது.
என்எஸ்இ இயக்குநா்கள் குழுவின் ஒப்புதலுடன் இத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், என்எஸ்இ ஐபிஓ-க்கு இருந்த முக்கிய சட்டத் தடைகள் நீங்கியுள்ளன.
Summary
NSE profit at Rs 5,252 crore for the April-June quarter.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பல்லோ மருத்துவமனை லாபம் 38.4% உயர்வு!

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எல்&டி லாபம் ரூ.4,123 கோடி

ஏப்ரல் - ஜூன் காலாண்டு: கனரா வங்கிக்கு ரூ.4,856 கோடி லாபம்

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



