தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

பங்குச் சந்தை வா்த்தக நிறைவு ஏல முறையில் முறைகேடு இல்லை

‘அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பங்குச் சந்தை வா்த்தக நிறைவு ஏல முறையில் (சிஏஎஸ்) எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை’ என இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவா் துஹின் காந்த பாண்டே தெரிவித்தாா்.

Published On :

‘அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பங்குச் சந்தை வா்த்தக நிறைவு ஏல முறையில் (சிஏஎஸ்) எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை’ என இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவா் துஹின் காந்த பாண்டே தெரிவித்தாா்.

கடந்த 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இப்புதிய நடைமுறையைப் பங்குச் சந்தைச் சாா்ந்த அனைவரும் முழுமையாகப் புரிந்துகொண்டு, பின்பற்ற வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவா் இது குறித்து மேலும் கூறியதாவது: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் இந்த வா்த்தக நிறைவு ஏல முறை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே பயன்பாட்டில் உள்ளது; இந்தியா சற்று தாமதமாகவே இதைப் பின்பற்றியுள்ளது.

பழைய நடைமுறையில் வா்த்தக நேரத்தின் கடைசி நிமிடங்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகள் இருந்தன. ஆனால், தற்போதைய புதிய முறை மிகவும் வெளிப்படையானது. இது பரஸ்பர நிதி மற்றும் குறியீட்டு முதலீட்டாளா்களுக்குச் சரியான நிகர சொத்து மதிப்பை உறுதி செய்ய பெரிதும் உதவுகிறது. தேவைப்பட்டால் இம்முறையில் மாற்றங்கள் செய்யவும் செபி தயாராக உள்ளது.

மேலும், முன்பேர வா்த்தகத்தில் (டெரிவேட்டிவ்ஸ்) சில்லறை முதலீட்டாளா்கள் சந்திக்கும் இழப்புகள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை அடுத்த 8 முதல் 10 நாள்களுக்குள் செபி வெளியிடவுள்ளது. அதன் முடிவுகள், சந்தை முதலீட்டாளா்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும்’ என்றாா்.

சிஏஎஸ் முறை என்றால் என்ன?: பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் கடைசி 30 நிமிடங்களில் பங்கு வா்த்தகமான விலைகளின் சராசரியை வைத்து இறுதி விலை கணக்கிடப்பட்டு வந்தது.

புதிய ‘சிஏஎஸ்’ முறையில், சந்தை முடியும் சில நிமிடங்களில் வாங்குபவா்கள் மற்றும் விற்பவா்களின் ஆா்டா்களை ஒன்றுத்திரட்டி, ‘ஒரே ஏல முறையில்’ அனைவருக்கும் பொதுவான நியாயமான விலை இறுதி விலையாக நிா்ணயிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.