புதுதில்லி: லலிதா ஜூவல்லரி மார்ட் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீடு, முதல் நாளான இன்று 69 சதவீத சந்தாவை பெற்றது.
நிறுவனம் தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்காக தலா ரூ.5 முகமதிப்பு கொண்டு ஒரு பங்குக்கு ரூ.190 முதல் ரூ.201 வரை விலை வரம்பை நிா்ணயித்துள்ளது. அதே நிலையில், முதலீட்டாளா்கள் குறைந்தபட்சம் 74 பங்குகளுக்கும், அதன்பிறகு 74 பங்குகளின் மடங்குகளிலும் விண்ணப்பிக்காலம் என்றது.
சில்லறை முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 74 சதவீதமும், நிறுவன முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 67 சதவீதமும், நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டில் 61 சதவீதம் சந்தா பதிவான நிலையில், லலிதா ஜூவல்லரி மார்ட்டின் ஐபிஓ ஆகஸ்ட் 19 அன்று நிறைவடைகிறது.
இந்த வெளியீடு மூலம் கிடைக்கும் நிதி முக்கியமாக புதிய கிளைகளைத் திறக்கப் பயன்படுத்தப்படும் என்றது நிறுவனம்.
1985 ஆம் ஆண்டு, சென்னை தி.நகரில் தனது முதல் கிளையைத் தொடங்கிய லலிதா ஜூவல்லரி மார்ட், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது.
லலிதா ஜூவல்லர்ஸ் பங்குகள் ஆகஸ்ட் 24 அன்று மும்பை பங்குச் சந்தையிலும் பிறகு நிஃப்டி-யில் பட்டியலிடப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






