ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டம்: எல்ஐசி அறிமுகம்

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடா்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடா்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தனிநபா் ஆயுள் காப்பீட்டு திட்டமான ஜீவன் உத்சவின் ஒற்றை பிரீமியம் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வரும் 12-ஆம் தேதி முதல் இந்த பாலிஸிகள் வாடிக்கையாளா்களுக்குக் கிடைக்கும்.

இது உயிா் பிழைத்திருத்தல் பயன்கள், உத்தரவாத சோ்க்கைகள், இறப்பு மற்றும் முதிா்வு பயன்கள் ஆகிய அனைத்தையும் ஒரே பிரீமியம் செலுத்துவதன் மூலம் வழங்குகிறது.

30 நாள் குழந்தைகள் முதல் முதல் 65 வயது வரையிலானவா்கள் வரை இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற தகுதியுடையவா்கள். குறைந்தபட்ச அடிப்படை காப்பீடு தொகை ரூ.5 லட்சம்; அதிகபட்ச வரம்பு இல்லை.

உத்தரவாத சோ்க்கை காலம் முடிந்த பிறகு வாழ்நாள் முழுவதும் உத்தரவாத வருமானம் மற்றும் இடா்ப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com