

புதுதில்லி: மின்சார வாகனத் துறையில் இயங்கி வரும் ஏ-1 சுரேஜா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது 1,425 குறைந்த வேக மின்சார இருசக்கர வாகனங்களுக்கான இரண்டு ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
முதல் ஆர்டர் ஜிப்னோவா எண்டர்பிரைஸ் எல்எல்பி நிறுவனத்திடமிருந்து 525 குறைந்த வேக மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கிடவும், இரண்டாவதாக ஆயுஷ்மான் இன்ஜினியரிங் நிறுவனத்திடமிருந்து 900 குறைந்த வேக மின்சார இருசக்கர வாகனங்களுக்காக ஆர்டரை பெற்றது.
இந்த ஆர்டரை கையகப்படுத்தியதால் நிறுவனத்தின் ஆர்டர் புக் வலுப்பெற்றதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக மலிவு விலை மற்றும் குறைந்த வேகத்தில் இயங்கும் மின்சார வாகனப் பிரிவில், அதிகரித்து வரும் சந்தை அங்கீகாரத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
சரியான நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்துதல், விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துதல் மூலம் தனது மின்சார வாகன வணிகத்தை விரிவுபடுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.