பாரத் எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டு வருவாய் உயர்வு!

வலுவான காலாண்டு முடிவை அடுத்து, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்குகள் கிட்டத்தட்ட 9% உயர்ந்தன.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
Updated on
1 min read

புதுதில்லி: வலுவான 3வது காலாண்டைத் தொடர்ந்து, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 9% உயர்ந்தன.

பிஎஸ்இ-யில் 8.90% உயர்ந்து ரூ.453.40ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் போது, ​​இது 9.99% உயர்ந்து ரூ.457.95 என்ற 52 வார உச்சத்தை தொட்டது.

என்எஸ்இ-யில் 8.90% உயர்ந்து ரூ.453ஆக முடிவடைந்தது.

இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.27,082.73 கோடி உயர்ந்து ரூ.3,31,425.37 கோடியாக உள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நிதியாண்டின் 3வது காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,590.06 கோடியாக பதிவு செய்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.1,316.06 கோடி லாபத்தை விட இது 20.82% அதிகம்.

நிதியாண்டின் டிசம்பர் முடிய உள்ள 3வது காலாண்டில், நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.7,121.98 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.5,756.12 கோடியுடன் ஒப்பிடும் போது இது 23.73% வளர்ச்சியாகும்.

Summary

Shares of Bharat Electronics Ltd jumped nearly 9 per cent following strong quarterly performance.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.91.79ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com