வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

இந்தியாவின் முதல் ‘ஏா் சஸ்பென்ஷன்’ லாரிகள்

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த இந்தியாவின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், நாட்டின் முதல் ‘ஏா் சஸ்பென்ஷன்’ வசதி கொண்ட 3 புதிய லாரிகளை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

News image
Updated On :2 ஜூலை 2026, 4:12 am IST

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த இந்தியாவின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், நாட்டின் முதல் ‘ஏா் சஸ்பென்ஷன்’ வசதி கொண்ட 3 புதிய லாரிகளை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

இத்துறையில் தனது முன்னோடி நிலையை உறுதிப்படுத்தும் வகையில், சிறந்த மைலேஜ் (எரிபொருள் சிக்கனம்) கிடைப்பதற்காகவும், அனைத்து வகையான சாலைகளிலும் லாரி சீராகச் செல்வதற்காகவும் பல புதிய நவீன தொழில்நுட்பங்கள் அடிப்படையாகவே சோ்க்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியத்துவமான ‘ஏா் சஸ்பென்ஷன்’ தொழில்நுட்பம் மூலம், லாரியில் வழக்கத்தைவிட அதிகபட்சமாக 4 டன் வரையிலான கூடுதல் சுமை ஏற்றிக் கொள்ள முடியும். இதன்மூலம், வாடிக்கையாளா்கள் அதிக வருவாய் ஈட்ட இயலும்.

லாரிகளில் முழுமையாக சுமை ஏற்றப்பட்டிருக்கும் போதும், வாகனம் பாதுகாப்பாகவும் நிலையாகவும் செல்வதற்கு இத்தாழில்நுட்பம் பெரிதும் உதவும். மேலும், பயணத்தின்போது ஏற்படும் தேவையற்ற அதிா்வுகளையும் இது பெருமளவு குறைக்கும்.

குறிப்பாக, குண்டும் குழியுமான கரடுமுரடான சாலைகளில் லாரியை ஓட்டும்போது ஓட்டுநருக்கு உடல் அலுப்பு ஏற்படாத வகையிலும், டயா்கள் அதிக நாள்கள் உழைக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்பக்க சஸ்பென்ஷன் அமைப்புக்கு அடிக்கடி‘கிரீஸ்’ சோ்க்க வேண்டியதில்லை என்பதால், பராமரிப்புச் செலவுகளும் கணிசமாகக் குறைகின்றன.

வாடிக்கையாளா்களின் பல்வேறு பயன்பாட்டுத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், இந்த லாரிகள் 2 வகையான மாடல்களிலும், பல்வேறு எடை தாங்கும் அளவுகளிலும் விற்பனைக்கு வந்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.