புதுதில்லி: நெருக்கடியைத் தொடர்ந்து மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் அடக்கவிலையை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்ததால், எச்பிசிஎல் நிறுவனத்தின் ஜூன் வரையான முதல் காலாண்டில் ரூ. 11,526.41 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்தது எச்பிசிஎல்.
ஏப்ரல் முதல் ஜூன் 2025 காலகட்டத்தில் ஈட்டப்பட்ட ரூ. 4,575.87 கோடி மற்றும் அதற்கு முந்தைய ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் கிடைத்த ரூ. 4,901.50 கோடி லாபம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இது இழப்பாகும்.
2025-26 நிதியாண்டில் எச்பிசிஎல் ரூ. 17,258.13 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது. இந்தக் காலாண்டில், சுத்திகரிப்பில் லாபம் கிடைத்திருந்தாலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனையில் ஏற்பட்ட நஷ்டம் அந்த லாபத்தை முற்றிலுமாக குறைத்துவிட்டது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் நடத்திய பதிலடி நடவடிக்கைக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்திக்கான மூலப்பொருளான கச்சா எண்ணெயின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தபோதிலும், அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டரை மாதங்களாக மாற்றமின்றி வைத்திருந்தது. மே மாதத்தின் பிற்பகுதியில் இந்நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 7.50-க்கும் அதிகமாக உயர்த்திய போதிலும், அது அடக்கவிலையை ஈடுகட்டப் போதுமானதாக இருக்கவில்லை.
அதேபோல 14.2 கிலோ சிலிண்டருக்கான சமையல் எரிவாயு விலையில் செய்யப்பட்ட ரூ. 89 உயர்வு கூட, தேவைப்பட்ட விலை உயர்வில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பீப்பாய் ஒன்றுக்கு, கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதன் மூலம் 3.08 டாலர் ஈட்டிய நிலையில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதங்களில், பீப்பாய் ஒன்றுக்கு 23.80 டாலர் வருவாய் ஈட்டியதாக எச்பிசிஎல் தெரிவித்தது.
கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 6.66 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்திகரித்த நிறுவனம், இந்த ஆண்டு அதே காலாண்டில் 6.52 மில்லியன் டன் மட்டுமே சுத்திகரித்துள்ளது.
Summary
HPCL reported a net loss of Rs 11,526.41 crore for the June quarter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











