புதுதில்லி: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மே மாதம் வாகன விநியோகம் 12 சதவீதம் உயர்ந்து 5,70,068 வாகனங்களாக இருப்பதாக இன்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் விற்பனை 5,07,701 வாகனங்களாக இருந்தது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், இம்மாதத்தில் உள்நாட்டு சில்லறை விற்பனை வேகம் வலுவாக இருந்ததாகத் தெரிவித்தது.
நிறுவனம், மே 2026ல் அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வணிகத்தில் வலுவான வேகத்தைத் தக்கவைத்துக்கொண்டதாகக் தெரிவித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது கிட்டத்தட்ட 10% வளர்ச்சி. அதே வேளையில், நிறுவனத்தின் உலகளாவிய வணிகம் 78 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப், அதன் சர்வதேச சந்தையில் நிலவும் வலுவான தேவை, விரிவடைந்து வரும் பிரீமியம் தயாரிப்பு வரிசை மற்றும் சந்தை விரிவாக்க நடவடிக்கை ஆதரவுடன் இணைந்து, நிறுவனத்தின் வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
Summary
Hero MotoCorp reported 12 per cent rise in dispatches at 5,70,068 units in May 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










