நிர்வாகத்தைதான் 6 மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டோம் எனக் கூறினோம்; ஆட்சியில் நடக்கும் அசம்பாவிதங்களை அல்ல: ஆ. இராசா புதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தில்லியில் அணிதிரளுவோம் - மமதா பானர்ஜிசிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை : ஆ. இராசா குற்றச்சாட்டுதுரோகத்தை வீழ்த்துவோம்! அதிமுகவைக் கட்டிக் காப்போம்! - எடப்பாடி பழனிசாமிவிஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்
/

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.29! 10 காசுகள் சரிவு!!

இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 95.29 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

News image

PTI Graphics

Updated On :2 ஜூன் 2026, 6:18 pm IST

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாலும், பாதுகாப்பான முதலீட்டுத் தளங்களைத் தேடிப் பெருமளவில் நிதி வரத்து இருந்ததால், டாலர் வலுவாக இருந்ததால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 95.29 ஆக வர்த்தகம் நிறைவுபெற்றது.

வெளிநாட்டு நிதி வரத்து கணிசமாக வெளியேறிய வருவதும் முதலீட்டாளர்களை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வருவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.16ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், அதிகபட்சமாக ரூ. 95.03 என்ற நிலையையும், குறைந்தபட்சமாக ரூ. 95.31 என்ற நிலையையும் எட்டியது. வர்த்தக இறுதியில், ரூபாய் மதிப்பு 95.29 ஆக வர்த்தகமானது. இது அதன் முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 10 காசுகள் சரிவாகும்.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ. 95.19ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

Summary

The rupee depreciated 10 paise to close at 95.29 against the US dollar on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.