மும்பை: அமெரிக்கா-ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையை, அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் மழுங்கடித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், இன்றைய காலை நேர வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 95.78ஆக வர்த்தகமானது.
அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரமடைந்து வருவது, டாலருக்கான 'பாதுகாப்பான புகலிடத்' தேவையை மீண்டும் அதிகரித்து வருவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.60 என்ற நிலையில் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், அதன் பொழிவை இழந்து, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.78 என்ற நிலைக்கு சென்றது. இது அதன் முந்தைய வர்த்தக முடிவில் இருந்த விலையிலிருந்து 8 காசுகள் குறைவு.
நேற்று (செவ்வாய்க்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 44 காசுகள் சரிந்து ரூ. 95.70 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவுபெற்றது.
Summary
The rupee slipped 8 paise to 95.78 against US dollar in early trade on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










