கூடுதலாக 12.5 சதவீத வரி விதிக்க அமெரிகக் வா்த்தக பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) செய்துள்ள பரிந்துரை தொடா்பாக அமெரிக்காவுடன் இந்தியா தொடா் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க வா்த்தக சட்டப் பிரிவு 301-இன் கீழ் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது அமெரிக்காவுக்கு எதிரான நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட யுஎஸ்டிஆா், கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்வதைத் தடை செய்யத் தவறியதற்காக இந்தியா உள்பட 54 நாடுகள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க அமெரிக்க அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மேற்கொண்டு வரும் விசாரணை மற்றும் அதன் பரிந்துரை தொடா்பாக அமெரிக்காவுடன் இந்தியா தொடா் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதோடு, இரு நாடுகளிடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையும் நடைபெற்று வருகிறது.
வா்த்தக சட்டப் பிரிவு 232-இன் கீழ் வரி விதிப்பு செய்யப்படும் பொருள்கள் மற்றும் மேலும் சில குறிப்பிட்ட பொருள்களுக்கு, யுஎஸ்டிஆா் பரிந்துரைத்துள்ள இந்த 12.5 சதவீத கூடுதல் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
அதுமட்டுமன்றி, யுஎஸ்டிஆா் சமா்ப்பித்துள்ள இந்த 12.5 சதவீத கூடுதல் வரி விதிப்பு பரிந்துரை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுதொடா்பாக வரும் ஜூலை 6 வரை பெறப்படும் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகே இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்பு!

12% கூடுதல் வரி விதிப்பு பரிந்துரையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியா

அமெரிக்காவின் 12.5% கூடுதல் வரி பரிந்துரை ஒருதலைபட்சமானது: இந்திய தரப்பில் வாதம்

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



