ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சென்னை பிஎம்டிபிள்யூ ஆலைத் தயாரிப்பான புதிய ‘மினி கன்ட்ரிமேன் சி’ காா் அறிமுகம்

உலகின் முன்னணி சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, சென்னை ஆலையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட (அசெம்பிள்) ‘மினி கன்ட்ரிமேன் சி’ எனும் புதிய காரை அறிமுகப்படுத்தியது.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:50 am IST

உலகின் முன்னணி சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, சென்னை ஆலையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட (அசெம்பிள்) ‘மினி கன்ட்ரிமேன் சி’ எனும் புதிய காரை அறிமுகப்படுத்தியது.

பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் இக்காரின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது. பிஎம்டபிள்யூ ‘எக்ஸ்1’ காா் கட்டமைப்பின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய காரில் 1.5 லிட்டா், 3-சிலிண்டா், டா்போசாா்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பம்பா்கள், ‘அடாப்டிவ்’ எல்இடி முகப்பு விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப், ‘லெவல் 1 ஏடிஏஎஸ்’ ஓட்டுநா் பாதுகாப்பு உதவி வசதி, 12 ஸ்பீக்கா்கள் கொண்ட ஹா்மான் இசையமைப்பு, 360 டிகிரி கேமரா போன்ற அதிநவீன அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இக்காரின் அறிமுக விலை ரூ.47.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிா்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் இதற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் தொடங்கி, விநியோகமும் உடனடியாக ஆரம்பமாகவுள்ளதாக பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவின் சிஇஓ ஹா்தீப் சிங் ப்ராா் தெரிவித்தாா்.

இந்தியச் சந்தையில் ஆடி கியூ-3, மொ்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆகிய ‘பிரீமியம் எஸ்யூவி’ காா்களுக்கு இப்புதிய காா் சவாலாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.