டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82 காசுகள் சரிந்து ரூ. 93.71ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 82 காசுகள் சரிந்து ரூ. 93.71ஆக நிறைவு.

கோப்புப் படம்

கோப்புப் படம்
மும்பை: அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 82 காசுகள் சரிந்து ரூ. 93.71 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவில் வர்த்தகம் நிறவடைந்தன.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 92.92 ஆக தொடங்கி, முதல் முறையாக ரூ.93 என்ற எல்லையை கடந்தது. வர்த்தக இறுதியில் முந்தைய முடிவிலிருந்து 82 காசுகள் குறைந்து ரூ.93.71ஆக நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 49 காசுகள் சரிந்து, அதன் முந்தைய சாதனைக் குறைந்தபட்ச அளவான ரூ. 92.89 ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...