மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜனவரியில் 2.52 பில்லியன் அமெரிக்க டாலரை வாங்கிய ரிசர்வ் வங்கி!

இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜனவரி மாதம் சந்தையிலிருந்து டாலரை வாங்கியுள்ளது.

News image

இந்திய ரிசர்வ் வங்கி

Updated On :23 மார்ச் 2026, 2:18 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஜனவரி மாதம் சந்தையிலிருந்து டாலரை வாங்கியுள்ளது.

ரிசர்வ் வங்கியானது, ஜனவரி மாதம் 2.526 பில்லியன் அமெரிக்க டாலரை வாங்கியுள்ளதாக தனது மாதாந்திர அறிக்கையில் இன்று தெரிவித்தது.

தொடர்ந்து ஏழு மாதங்களாக டாலரை விற்பனை செய்த நிலையில், ஜனவரி மாதம் டாலரை வாங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதற்கு முன்பு, மே 2025ல் ரிசர்வ் வங்கி 1.764 பில்லியன் அமெரிக்க டாலரை வாங்கியிருந்தது.

தரவுகளின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி டிசம்பரில் 10.02 பில்லியன் அமெரிக்க டாலர், நவம்பரில் 9.710 பில்லியன் அமெரிக்க டாலர், அக்டோபரில் 11.877 பில்லியன் அமெரிக்க டாலர், செப்டம்பரில் 7.910 பில்லியன் அமெரிக்க டாலர், ஆகஸ்டில் 7.695 பில்லியன் அமெரிக்க டாலர், ஜூலையில் 2.540 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் ஜூன் மாதத்தில் 3.661 பில்லியன் டாலரை விற்பனை செய்தது.

சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ஜனவரி மாதம் 27.999 பில்லியன் டாலரை வாங்கியுள்ள நிலையில் 25.473 பில்லியன் டாலரை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Summary

The Reserve Bank of India purchased net USD 2.526 billion of forex from the spot currency market in January.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.