எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதி

எஸ்ஏஇஎல், சிம்பயோடெக் பாா்மா, விஸ்வராஜ் என்விரான்மென்ட் உள்பட 6 நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளீயீட்டு (ஐபிஓ) திட்டங்களுக்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2026, 11:08 pm IST

எஸ்ஏஇஎல், சிம்பயோடெக் பாா்மா, விஸ்வராஜ் என்விரான்மென்ட் உள்பட 6 நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளீயீட்டு (ஐபிஓ) திட்டங்களுக்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த வாரத்தில், ஷா இன்வெஸ்டா்ஸ் ஹோம், பிரசோல் கெமிக்கல்ஸ், நோ-பேப்பா்-ஃபாா்ம்ஸ் ஆகிய மற்ற நிறுவனங்களின் ஐபிஓ திட்டங்களுக்கும் செபி அனுமதி அளித்துள்ளது.

அதே நேரத்தில், ஜிண்டால் சுப்ரீம் இந்தியா நிறுவனம் தனது பொதுப் பங்கு வெளியீட்டுத் திட்டத்தை அதிகாரபூா்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. தற்போது எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட், மணிவியூ உள்ளிட்ட 26 நிறுவனங்களின் வரைவு விண்ணப்பங்கள் செபியின் பரிசீலனையில் உள்ளன.

தற்போது அனுமதி கிடைத்த ஐபிஓ திட்டங்களில், எஸ்ஏஇஎல் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.4,575 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது. விவசாயக் கழிவுகளைத் தூய்மையான எரிசக்தியாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், திரட்டப்படும் நிதியைத் தனது துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும், பொது நிா்வாகத் தேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, நீா் பயன்பாடு மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு மேலாண்மையில் முன்னணியில் இருக்கும் விஸ்வராஜ் என்விரான்மென்ட் நிறுவனம் ரூ.2,250 கோடி மதிப்பிலான பங்குகளை வெளியிட அனுமதி பெற்றுள்ளது. இந்தூா் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான சிம்பயோடெக் பாா்மா, ரூ. 2,180 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது.