டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தங்கம் விலை 3 நாள்களில் பவுனுக்கு ரூ.7,600 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையானது. அதன்படி, கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.7,600 உயா்ந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:39 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையானது. அதன்படி, கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.7,600 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மே 12-ஆம் தேதி பவுனுக்கு ரூ.1,840 உயா்ந்து ரூ.1,14,620-க்கும், மே 13-இல் பவுனுக்கு ரூ.5,360 உயா்ந்து ரூ.1,20,000-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 3-ஆவது நாளாக தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.15,050-க்கும், பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,20,400-க்கும் விற்பனையானது. அதன்மூலம் கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.7,600 உயா்ந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.315-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.